அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இவ்விரு படங்களும் முறையே ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 30 தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்றபட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்பும் தலயின் மங்காத்தா மற்றும் தளபதியின் வேலாயுதம் இந்த இரண்டிலும்தான். ஆனால் தமிழ் சினிமாவில் மூழ்கி முத்தெடுக்கும் பல ஆராய்சியாளகளின் கணிப்பு என்னவென்றால் இந்த இரண்டு படங்களுக்களின் ரிலீஸ் தேதிகளுக்கு இடையே, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் ரிலீசாகவிருக்கும் 'வாகைசூடவா' படம் ஒரு கருப்பு குதிரையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். பொருத்திருந்து பார்ப்போம்.
Wednesday, August 3, 2011
Tuesday, August 2, 2011
ஆகஸ்டில் 13 படங்கள்... மங்காத்தா, வேலாயுதம் வெளியாகுமா?
கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்த்க குறையைப் போக்கும் விதத்தில், இந்த ஒரு மாதம் மட்டுமே 15 புதிய படங்கள் வெளியாகப் போவதாக கூறப்பட்டது.
இவற்றில் விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா ஆகிய இரு பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும்.
மங்காத்தா படம் ஆகஸ்ட் 19-ம் தேதி வரும் என்றார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. வேலாயுதம் ஆகஸ்ட் 30-ம் தேதி என்கிறார்கள். ஆனால் இந்தப் படங்களின் ஆடியோ கூட இன்னும் வெளியாகவில்லை.
அதே நேரம், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரதினம் என்பதால் 12-ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு பின் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்களாக வருகின்றன.
எனவே அன்று முடிந்த வரை அதிக படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள். மங்காத்தா, வேலாயுதம் தவிர, 13 படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்டு 5-ல் டூ, பட்டா பட்டி, ராமநாதபுரம், அர்ஜூன் நடித்த சிங்க கோட்டை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
ஆகஸ்டு 12-ந்தேதி ஜீவாவின் ரௌத்திரம், சகாக்கள், சங்கரன்கோவில், யுவன் ஆகிய படங்கள் வருகின்றன.
ஆகஸ்டு 19-ல் ஏவிஎம்மின் முதல் இடம், ஆர்கேவின் புலிவேஷம், தேனி மாவட்டம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன.
முதல் படத்தில் மைனா வித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. புலிவேஷம் படத்தை பி. வாசு இயக்கி உள்ளார். ஆர்.கே., சதா ஜோடியாக நடித்துள்ளனர்.
ஆகஸ்டு 26-ல் வாகை சூடவா, யுவன் யுவதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. யுவன் யுவதியில் பரத் நாயகனாக நடித்துள்ளார். புதிய களம், வித்தியாசமான படமாக்கம் போன்றவற்றால் வாகை சூடவா எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.
இது ஆகஸ்ட் கொண்டாட்டம் -அஜீத், விஜய், சூர்யா பட ஆடியோ ரிலீஸ்
ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை ரசிகர்களுக்கு முப்பெரும் விழா காலமாக
இருக்கும். அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு படங்களின் பாடல் வெளியீட்டு விழா இந்த மாதத்தில்தான் நடைபெற இருக்கிறது. 10 ந் தேதி மங்காத்தா, 15 ந் தேதி வேலாயுதம், 20 ந் தேதி ஏழாம் அறிவு என்பதுதான் இதுவரை சொல்லப்படும் திட்டம்.
இது கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டது என்றாலும், மங்காத்தாவில் மட்டும்தான் அதிக ஊசலாட்டம் என்கிறார்கள். விழா சிம்பிளாக நடக்கட்டும் என்று அஜீத் சொல்வதாலும், படத்தை உடனடியாக கைமாற்றிவிடுகிற திட்டத்தில் துரை.தயாநிதி இருப்பதாலும்தான் இந்த ஊசலாட்டமாம்.
மற்றொரு ஊசலாட்டம் சூர்யா படத்திற்கு. ஏழாம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்தாலும், நில மோசடி வழக்கு ஒன்றில் இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனால் விழா நடைபெறும் சில தினங்களுக்கு முன் வரை என்ன நடக்கும் என்பதையும் யூகிக்க முடியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
எல்லாரும் சேர்ந்து, ரசிகர்களை ஏமாத்திராதீங்க ஸ்டார்ஸ்
Monday, August 1, 2011
விஜய் என் தம்பி: அஜீத்
அஜீத், மரியாதை நிமித்தமாக கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை, அஜீத் தன்னுடைய படத்தின் ப்ரொமோவுக்கு வருவதில்லை போன்ற செய்திகள் தற்போது அதிக அளவில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு பதிலளித்துள்ள அஜீத் "எனக்கு அரசியலில் எல்லோரும் நண்பர்கள்தான், ஆனால் சினிமாவில்தான் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள், அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். என்படத்திற்கு எப்போதும் பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று பத்திரிக்கைகள் சொல்லி வருகின்றன அந்த ஓப்பனிங்கை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் என்படம் ரிலீசாகும் சமயத்திலெல்லாம் என்னைப்பற்றிய வேண்டாத செய்திகளை கிளப்பி விடுகின்றனர்" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் பாய்ட் அவுட் செய்வது விஜய் தரப்பையா? என்ற கேள்விக்கு "விஜய் என் தம்பி. அவர் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டார். அவருக்கும் எனக்கும் ஏதோ தகராறு போல் சித்தரிப்பதே தேவையில்லாத விசயம்" என்றும் விளக்கமளித்துள்ளார்.
நீங்கள் பாய்ட் அவுட் செய்வது விஜய் தரப்பையா? என்ற கேள்விக்கு "விஜய் என் தம்பி. அவர் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டார். அவருக்கும் எனக்கும் ஏதோ தகராறு போல் சித்தரிப்பதே தேவையில்லாத விசயம்" என்றும் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் ஈழம் – விஜய் தந்தை காமெடி
விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது போட முடியாது என்று சொன்னதாக சிறுத்தைகள் குற்றம்சாற்றுகிறார்கள். விஜய் சார்பில் வாய்ஸ் கொடுக்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அதற்கு மேல் அவர் சொன்னதுதான் காமெடி.
தமிழ் ஈழம் மலரவும், ஈழத்தமிழர் பாதுகாப்பாக வாழவும் விஜய் வழி செய்வார் என்று கூறியிருக்கிறார். காவலன் படத்தை ஒழுங்காக ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அதிமுகவிடம் அடைக்கலம் தேடியவர் ஈழத்தை மலர வைக்கப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போன கதைதான்.
அது விஜய்க்கு மட்டும்தான்... மத்தவங்களுக்கு இல்ல! - அனுயா
இந்த நிலையில்தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய டைரக்டர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் விஷயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா. அதுமட்டுமல்ல, ரூ 30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?" என்றார்.
VIJAY'S KISS: WILL HE OR WON'T HE?
Nanban is progressing day in and day out what with Shankar calling the shots in the studios in Chennai. Vijay, Jiiva and Srikanth play the three friends.
Subscribe to:
Posts (Atom)