கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்த்க குறையைப் போக்கும் விதத்தில், இந்த ஒரு மாதம் மட்டுமே 15 புதிய படங்கள் வெளியாகப் போவதாக கூறப்பட்டது.
இவற்றில் விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா ஆகிய இரு பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும்.
மங்காத்தா படம் ஆகஸ்ட் 19-ம் தேதி வரும் என்றார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. வேலாயுதம் ஆகஸ்ட் 30-ம் தேதி என்கிறார்கள். ஆனால் இந்தப் படங்களின் ஆடியோ கூட இன்னும் வெளியாகவில்லை.
அதே நேரம், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரதினம் என்பதால் 12-ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு பின் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்களாக வருகின்றன.
எனவே அன்று முடிந்த வரை அதிக படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள். மங்காத்தா, வேலாயுதம் தவிர, 13 படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்டு 5-ல் டூ, பட்டா பட்டி, ராமநாதபுரம், அர்ஜூன் நடித்த சிங்க கோட்டை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
ஆகஸ்டு 12-ந்தேதி ஜீவாவின் ரௌத்திரம், சகாக்கள், சங்கரன்கோவில், யுவன் ஆகிய படங்கள் வருகின்றன.
ஆகஸ்டு 19-ல் ஏவிஎம்மின் முதல் இடம், ஆர்கேவின் புலிவேஷம், தேனி மாவட்டம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன.
முதல் படத்தில் மைனா வித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. புலிவேஷம் படத்தை பி. வாசு இயக்கி உள்ளார். ஆர்.கே., சதா ஜோடியாக நடித்துள்ளனர்.
ஆகஸ்டு 26-ல் வாகை சூடவா, யுவன் யுவதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. யுவன் யுவதியில் பரத் நாயகனாக நடித்துள்ளார். புதிய களம், வித்தியாசமான படமாக்கம் போன்றவற்றால் வாகை சூடவா எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment