இப்படம் அடுத்த ஆண்டு தான் துவங்கும் என்றாலும் நாயகி யார், படத்தின் கதை குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் : தற்போது 'விண்ணைத்தாண்டி வருவாயா' இந்தி ரீமேக்கை இயக்கி வரும் கெளதம் மேனன், அடுத்தாக ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி முடித்துவிட்டு தான் இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் நாயகியாக நடித்து வரும் 'மதராசபட்டினம்' எமி ஜாக்சன், இப்படத்திலும் நாயகியாக நடிக்க இருக்கிறாராம். இன்னொரு நாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தை இயக்க இருக்கிறாராம் கௌதம். தமிழில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிக்க இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் வெளிவரும் முதல் தமிழ் படம் இது தானாம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் |
Tuesday, August 9, 2011
விஜய்யும் மகேஷ்பாபுவும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment