இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அறிவித்தார். ‘’பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வந்துள்ளது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வருகிறது. அதாவது தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது’’ என்றார்.
வரும் அக்டோபர் 26-ம் தேதி அன்றுதான் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’, சிம்புவின் ‘ஒஸ்தி’, தனுஷின் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment