சன் பிக்சர்ஸ் வாங்கிய படங்களும், அது தொடர்பான பஞ்சாயத்துகளும் கோர்ட் படியேறியதோடு நில்லாமல், அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சக்சேனாவையும்
சிறைக்குள் தள்ளியது. எந்திரன் படத்தில் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வர வேண்டியிருக்கிறது என்று கடந்த வாரம் கூட சில திரையரங்க உரிமையாளர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒரு புறம் புதிய புதிய புகார்கள் வரவர இன்னொரு பக்கம் சக்சேனா மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.
இதுவரை நான்கு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றதால்தான் இந்த விடுவிப்பு. இருந்தாலும், புதிய வழக்குகளில் அவருக்கு காவல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் புதிய பொலிவோடு இயங்கவிருக்கிறதாம். அதற்கு அச்சாரம் போடும் விதத்தில், புதிய சி.இ.ஓ நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது பெயர் செம்பியன். பிரபல தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன்தானாம் இவர்.
இதை தொடர்ந்து விஜய் நடித்த நண்பன் படத்தை வாங்கி வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம். இதுவரை விஜய்யிடம் முறைப்பு காட்டி வந்தவர்கள், மீண்டும் கைகுலுக்கி விட்டதாகவும் தகவல் உலவுகிறது.
No comments:
Post a Comment