ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சீமான், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களைத் தொடர்ந்து, இப்போது புதிதாக இணைந்து இருப்பது இயக்குனர் விஜய். இயக்குனர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைய இருக்கிறார்களாம். கெளதம் மேனன் - விஜய் இணையும் படத்திற்கு முன்பாக இப்படம் அமையலாம் என்று நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இயக்குனர் விஜய்க்கு நெருக்கமானவர்களோ அஜீத்துடன் 'கிரீடம்' படத்தில் ஏற்பட்ட நட்பு இன்னும் தொடர்வதால், இருவரும் 'பில்லா -2' படப்பிடிப்பு முடிந்தவுடன் இணைவது உறுதி என்று கூறுகிறார்கள். 'தெய்வத்திருமகளு'க்கு கிடைத்த வரவேற்பால் அதே அணி யு.டிவி தயாரிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் இணைகிறார்கள் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள். விஜய் யாரை இயக்குவார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும் |
Saturday, August 20, 2011
விஜய்..? விக்ரம்..? அஜீத்..?!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment