Thursday, June 20, 2013

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்பு

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்புவிஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். 

இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது. 

தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

 விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.

Wednesday, June 19, 2013

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!தலைவா படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருடன் நடனம் ஆடுகிறார் ஜிவி பிரகாஷ் குமார். 

இசையமைப்பாளர்கள் அனைவருமே இப்போது திரையில் தோன்ற அல்லது நடனமாட ஆரம்பித்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா கூட ஒரு படத்தில் முழுப் பாடலுக்கும் தோன்றுகிறார். அவர் மகன் யுவன் சங்கர் ராஜாவை நிறைய படங்களில் பாடலுக்கு நடனமாட வைக்கின்றனர் இயக்குநர்கள். 

ஏ ஆர் ரஹ்மான் ஏற்கெனவே தனி இசை வீடியோவே வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமும் இடம்பெற்றுள்ளது. அடுத்து இமானும் அதே போல ஒரு பாடலுக்கு தோன்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிக்கிறார். 

விஜய் ஆன்டனியோ முழுப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் பட்டியலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும் இணைகிறார். விஜய் நடிக்கும் தலைவா படத்தில், ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் இணையதளங்களில் லீக்கான 'வாங்கண்ணா...' என்ற பாடலுக்குத்தான் இருவரும் ஆடுகிறார்களாம். 

தலைவா பட ஆடியோ, விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது.

விஜய் சின்சியர், சூர்யா சிங்கம், சிம்பு வாலு, சந்தானம் அய்யய்யோ

ஹன்சிகா தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

இன்றைய தேதியில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அவர் சூர்யாவுடன் நடித்துள்ள சிங்கம் 2 விரைவில் ரிலீஸ் ஆகிறது. பிரியாணி பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் அவர் தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

விஜய்


 தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

சூர்யா 

சூர்யா எப்படி என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிங்கம் என்றார்.
ரவி 

எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி நாட்டி(குறும்புத்தனம்) என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு 

சிம்பு எப்படிப்பட்டவர் என்று கேட்டதற்கு வாலு என்று பதில் கூறினார் ஹன்சிகா.

ஆர்யா

சேட்டை நாயகன் ஆர்யா என்று கேட்டதற்கு ஃபன்(வேடிக்கையானவர்) என்று ஹன்சிகா தெரிவித்தார்.

சந்தானம் 

ஹன்சிகாவின் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானம் பற்றி கேட்டதற்கு அவரின் ரியாக்ஷன் அய்யய்யோ. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் என்றார்.



விஜய் - ஜிவி முதல் காம்பினேஷனில் தலைவா... பாட்டு சாம்பிள் கேட்டீங்களா?

விஜய்- ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் காம்பினேஷனில் உருவாகியுள்ள தலைவா படப் பாடல்கள் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகின்றன. 

அதற்கு முன் அனைத்துப் பாடல்களின் சாம்பிள் துணுக்குகளை டீஸராக வெளியிட்டுள்ளனர், பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனம். அமேசான் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கும் இந்த சாம்பிள் பாடல்கள் குறித்து ஒரு பார்வை...

6 பாடல்கள்..

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் நா முத்துகுமார் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமா்ர் இசையமைத்துள்ளார்
.


வாங்கண்ணா வணக்கங்கண்ணா...

இந்த ஆறு பாடல்களில் கேட்டதும் பிடித்துப் போகும் பாடல், விஜய் - சந்தானம் பாடியுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. மை சாங்க நீ கேளுங்கண்ணா... பாடல்தான். முதல் முறை கேட்கும்போதே நினைவில் நிற்கிறது. இந்தப் பாடல்தான் இணையதங்களில் வெளியாகிவிட்டதாக சில தினங்களுக்கு முன் தலைவா குழுவினர் போலீசில் புகார் செய்திருந்தனர்.


தமிழ்ப் பசங்க... 

தமிழோடுதானே என் சங்கீதங்க... என்று ஆரம்பிக்கிறது இந்த தமிழ்ப் பசங்க பாட்டு. பென்னி தயாள், ஷீஸே பாடியுள்ளனர். சுமாராக இருக்கிறது


யார் இந்த சாலை ஓரம்... 

ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள டூயட் பாட்டு, யார் இந்த சாலை ஓரம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இசையில் புதுமை என்று எதுவுமில்லை.



சொல் சொல்... 

கொஞ்சம் வேகமான ரொமான்டிக் பாட்டு இந்த சொல் சொல்.... விஜய் பிரகாஷ், அபஸ் ஜோத்புர்கர், மேகா பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும்போது பெரிதாக கவரவில்லை. முழுப் பாடலும் வெளியான பிறகுதான் தெரியும்.



தி எக்ஸ்டஸி ஆஃப் டான்ஸ்

 இது தீம் மியூசிக் மாதிரி வருகிறது. சென்னை சிம்பொனியுடன் இணைந்து கிரண் பாடியுள்ளார். ஆனால் ஏற்கெனவே புன்னகை மன்னன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களில் கேட்ட தீம் மியூசிக் மாதிரிதான் இருக்கிறது.



தலைவா தலைவா 

இதுதான் டைட்டில் பாட்டு மாதிரி தெரிகிறது. வழக்கம் போல ஆக்ஷன் ஹீரோவுக்கான ஒரு ரெடிமேட் பாடல். ஹரிசரண், பூஜா, ஜியா வுல் அக் பாடியுள்ளனர். ஹே ராமில் வரும் 'ராம் ராம்...' பாடலை நினைவூட்டுகிறது அந்த பீட்.





Monday, June 17, 2013

விஜய்யை ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் பி. வாசு?

P Vasu Takes Vijay Hollywood இயக்குனர் பி. வாசு ஹாலிவுட் படத்தை எடுக்கிறாராம். அதில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. 

இயக்குனர் பி. வாசு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களை எடுத்து வெற்றி கண்டவர். அவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை எடுக்கவிருக்கிறாராம். படத்திற்கு கரி ஆஃப் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

 ஹாலிவுட் போகும் வாசு தன்னுடன் இளைய தளபதி விஜய்யை அழைத்துச் செல்ல விரும்புகிறாராம். அதாவது தனது ஹாலிவுட் படத்தில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். விஜய்க்கு ஜோடியாக சோனம் கபூரை நடிக்க வைக்க வாசு விரும்புகிறாராம். 

ஆனால் இது குறித்து வாசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Friday, June 14, 2013

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்? மௌனம் கலைத்தார் விஜய்

Why Did My Function Get Cancelled Explains Vijay தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை.

என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று.

இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்.

Wednesday, June 12, 2013

Vijay Wins Vikatan Poll “Who has more Fans at Present in Tamil Cinema?”

Vijay Wins Vikatan Poll
Ilayathalapathy Vijay has Won the Prestigious Poll conducted by VIKATAN with 44% of Votes. Vikatan conducted a poll on current Actors to see, “Who has more Fans at Present in Tamil Cinema?”

In the poll Vijay won with a massive 44% of vote. Ajith came second with 39% of votes and Rajini came third with 9% of votes. This poll once again proves the mass of Vijay.

Vijay also recently won the Favourite Hero of the Year Award at Vijay Awards 2013, which was also done through online voting. Vijay Awards 2013 and Vikatan clearly show that Vijay is king of Kollywood now and he has a huge fan following in Tamil Nadu.