Friday, August 23, 2013

தலைவா பட விவகாரம்- எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் விஜயகாந்த்!

தலைவா பட விவகாரம்- எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் விஜயகாந்த்!நான் இப்போது சினிமாக்காரன் இல்லை.. நான் ஒரு அரசியல்வாதி, எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை, என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் வந்திருந்தனர். 

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: 

ஆந்திராவை பிரிப்பது போல் தமிழகத்திலும் மாநிலம் பிரிக்கப்படுமா?. 

ஆந்திராவிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இங்கு அதற்கான முடிவு வந்தபிறகு தமிழகம் பிரிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கலாம்.

 தலைவா சிக்கல்

 தமிழகத்தில் விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். 

சினிமா நடிகராக இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். தலைவா விவகாரத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. இப்போது நான் சினிமாக்காரனே இல்லை என்று பதில் கூறியுள்ளார்.

Wednesday, August 21, 2013

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்

 நாயகன் - ஒரு கிலோ 

சர்க்கார் - அரை கிலோ 

பாம்பே -1 துண்டு 

தேவர்மகன் - 6 பல் 

இந்திரா - ஒரு தேக்கரண்டி 

பில்லா - அரை கப் 

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன் 

பொல்லாதவன் - தேவையான அளவு 

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் . 

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். 

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். 

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.

தலைவா: தியேட்டர் முன்பு கெடா வெட்டி, மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்

தலைவா படம் ரிலீஸானதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுள்ளனர். 

தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.

மருத்துவமனையில் தயாரிப்பாளர் 

படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ் 

பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.


உதயம் தியேட்டர் 

சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.


ஆடு வெட்டி, மொட்டை 

புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.


பாலாபிஷேகம் 

ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.





Monday, August 19, 2013

சர்ச்சையில் சிக்கித் தத்தளித்த படங்கள்: ஒரு பார்வை

சில காட்சிகள் மற்றும் வசனங்களால் சர்ச்சையில் சிக்கிய சில படங்களை பார்ப்போம்.

இந்திய திரை உலகம் இதுவரை எத்தனையோ படங்களை பார்த்துள்து. அதில் சில படங்கள் ரிலீஸாகும் முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும்.

அப்படி சர்ச்சைகளில் சிக்கித் தள்ளாடிய படங்களில் சிலவற்றை பார்ப்போம்.

தலைவா 

விஜய் நடித்துள்ள தலைவா படத்தில் அரசியல் சம்பந்தமான வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரவே படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு படக்குழுவினர் முதல்வரை அணுகி பிரச்சனையை தீர்த்தனர். ரம்ஜானுக்கு ரிலீஸாக வேண்டிய படம் ஒருவழியாக வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது

களிமண்ணு 

மலையாள படமான களிமண்ணுவில் நடிகை ஸ்வேதா மேனின் நிஜ பிரசவக் காட்சியை வைத்துள்ளனர். இதனால் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மெட்ராஸ் கஃபே 

ஜான், ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று காண்பித்துள்ளனர் என்று தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


விஸ்வரூபம் 

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை 
தீவிரவாதிகளாக காட்டியதாகக் கூறி அப்படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசு தடை விதித்தது. கமல் ஹாஸன் பல நாட்கள் போராடிய பிறகு படம் ரிலீஸ் ஆனது.


சின் 

வினோத் பாண்டேவின் இயக்கத்தில் வந்த படம் சின். அதில் பாதிரியாராக வந்த ஷைனி அஹுஜா இளம் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது போன்று காண்பிக்கப்பட்டது ரோமன் கத்தோலிக்கர்களை கோபமடையச் செய்தது. இந்த படத்தின் விளம்பர துணுக்குகளை கூட ஒளிபரப்ப டிவி சேனல்கள் மறுத்துவிட்டன.


ஃபயர் 

பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை மையமாக வைத்து தீபா மேத்தா எடுத்த படம் ஃபயர். 1998ல் இந்த படம் வெளியானபோது மும்பை மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்களை இந்து அமைப்பினர் தாக்கினர். ஆனால் கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் படத்தை நிறுத்த அரசியல் அமைப்புகள் முயன்றபோது நிர்வாகமும், ரசிகர்களும் அதை எதிர்த்து போராடினர்.





தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

தலைவா திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ட்விட்டரில் மு.க .ஸ்டாலின் மகன் உதயநிதி கலாய்க்க, அவருடன் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியும் கரம் கோர்த்திருக்கிறார். 

தலைவா படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவே முடியாத 'உள்' காரணங்களால் முட்டுக்கட்டை நீடித்தது. 

ஒருவழியாக நாளை தலைவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவுதான் உதயநிதி ஸ்டாலினும் துரைதயாநிதி அழகிரியும் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்கள்.தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

அம்மாவுக்கு நன்றி சொல்லலையே.. 

உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் அம்மாவுக்கு யாரும் நன்றி சொல்லலையே? மாணவர் புரட்சி படைக்கு என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறார். 

கரம் கோர்த்த மு.க. அழகிரி மகன் 

இந்த ட்விட்டருக்கு பதில் கொடுத்திருப்பவர் மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி அழகிரிதலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!

தலைவா பற்றி அழகிரி மகன் சொன்னது என்ன? 

தலைவா படம் செவ்வாய்க்கிழமை வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை அரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதே இதே நடவடிக்கையை அரசு ஏன் முன்னரே எடுக்கவில்லை? அப்படி முன்னரே எடுத்திருந்தால் படம் பிரச்சனையின்றி ரிலீஸாகி இருக்குமே? நான் நினைக்கிறேன் இது சரியான கேள்வி என்று! மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்

தலைவாவுக்கு நாளை ராஜ உபச்சாரம் தான்

தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாளை உதயம் தியேட்டருக்கு கொண்டு வரப்படுகிறது. 

விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.

தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர். 

மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Friday, August 16, 2013

அம்மா மனமிறங்குங்க... தலைவா ரிலீஸ் ஆகலேன்னா நடுத்தெருவுக்கு வந்துருவேன்- சந்திரபிரகாஷ் ஜெயின்

முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம்   வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா... 

அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.


நல்ல தயாரிப்பாளர்... நாணயமானவன் 

நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

4 வருடமாக முயற்சித்து 

கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
9ம் தேதி வெளியிட ஒப்பந்தம்

 கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.


யாரோ குண்டு மிரட்டல் விட்டுட்டாங்கம்மா... 

இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று 
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.














தியேட்டர்காரர்கள் பயந்துட்டாங்கம்மா 

இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.


வெளிமாநிலத்தில் வெளியாகிடுச்சேம்மா... 

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.


திருட்டு டிவிடி வந்துருச்சேம்மா...

 இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.


பெரிய கடனாளியாகி விடுவேன் 

இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.



மன உளைச்சல் 

இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.

அம்மா மனமிறங்கி... 

ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.