Friday, August 16, 2013

தலைவா' பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத் சார் பாடுபடுகிறார்: ராதிகா

'தலைவா' பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத் சார் பாடுபடுகிறார்: ராதிகா தலைவா பட பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத்குமார் பாடுபடுவதாக ராதிகா தெரிவித்துள்ளார். 

தலைவா படம் தமிழகத்தில் என்று ரிலீஸாகும் என்பது தான் விஜய் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி. படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. 

இதற்கிடையே தலைவா திருட்டு சிடிக்கள் விற்பனை விஜய்யை வேதனைப்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களோ திரையுலகினர் யாரும் உதவமாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர். 

இந்நிலையில் இது குறித்து ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 

அமைதியாக செயல்படுவது சரியா? இல்லை பேசிக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது சரியா? விஜய் ரசிகர்களே, பிரச்சனையை தீர்க்க சரத் சார் விஜய்யுடன் சேர்ந்து பாடுபடுகிறார். அவர்களை பணியாற்ற விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கைவிரித்த சூர்யா, ஹரி: கைகொடுத்த விஜய்

சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார். 

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை.கைவிரித்த சூர்யா, ஹரி: கைகொடுத்த விஜய்
சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர்.
ரஞ்சனுக்கு காயம் 

சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க, ரஞ்சன் எகிறி குதித்து கடலில் விழுகிறார். அப்போது அவர் தடுமாறி பாறையின் மீது விழுகிறார். இந்த காட்சியில் ரஞ்சனின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இனி நடக்கவே முடியாது 

ரஞ்சனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித்தனர். சூர்யா ரஞ்சனை மருத்துவமனைக்கு வந்து ஒரு முறை பார்த்துள்ளார். அதன் பிறகு படக்குழுவினர் யாரும் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம். 

இன்ஸ்பெக்டர் 

சிங்கம் 2 படப்பிடிப்பிற்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சனின் மருத்துவ செலவை ஏற்றிருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் சென்னைக்கு சென்று ஹரியையும், சூர்யாவையும் சந்தித்து ரஞ்சனின் பரிதாப நிலையை எடுத்துக் கூறியுள்ளார். 

ஆனால், ஹரியும், சூர்யாவும் கையைவிரிக்க அந்த இன்ஸ்பெக்டருக்கு சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பது குறித்து தெரிய வந்துள்ளது. உடனே அவர் படப்பிடிப்புக்கு சென்று விஜய்யை சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே விஜய் ரூ.40,000 ரொக்கம் மற்றும் 2 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை தனது உதவியாளர் மூலம் ரஞ்சன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனுதலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். 

எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர். 

அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது.

 வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது. 

இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். 

சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் vijeenthiran.blogspot.com

Thursday, August 15, 2013

தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!

தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!  விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன.

இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். 

இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 

எனவே இனி படத்தை வெளியிடுவது தியேட்டர்காரர்கள் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்தனர். 

ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். 250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம். மினிமம் கியாரண்டி அடிப்படையில் என்றால், படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். 

இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும். 

உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.vijeenthiran.blogspot.com

தலைவா ரிலீஸாக உதவி செய்து எங்களை காப்பாத்தணும்: ஜெ.வுக்கு தயாரிப்பாளர் கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது 

குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.தலைவா ரிலீஸாக உதவி செய்து எங்களை காப்பாத்தணும்: ஜெ.வுக்கு தயாரிப்பாளர் கோரிக்கை

கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன். 

கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன். 

இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது. 

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது. 

இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன். 

இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள். ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். உடனடி செய்திகளுக்கு எப்போதும்

Wednesday, August 14, 2013

தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா' தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்லோருக்கும் வணக்கம்
தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர். 

அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்... 

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்... 

தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க.

நடிகர் விஜய்யின் வீடியோ அறிக்கை

'நாளைய முதல்வனே': ஓசூரில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நாளைய முதல்வனே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஓசூரில் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. இதனால் தமிழக ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆணைக்கல், அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் தலைவா பட சிடிக்கள் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது. 

படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்கால் தான் தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஓசூரில் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் நாளைய முதல்வனே என்று விஜய்யை குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் குறித்த விவரங்களை உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாம்.