Tuesday, May 21, 2013

நீங்கள் பார்த்திராத உங்கள் 'தலைவா'


ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்ப்போம். 

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தலைவா. மும்பையில் துவங்கிய படப்பிடிப்பு இறுதியில் ஆஸ்திரேலியாவில் முடிந்தது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார். 

அந்த பாடலை கேட்ட அஜீத் இந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தலைவா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக...

தலைவா விஜய் 

எங்கோ சீரியஸாகப் பார்க்கும் விஜய்.



கிட்டார் வாசித்து ஹீரோயினை இம்பிரஸ் பண்ண முயற்சிக்கும் விஜய்.

இந்த போஸ் எப்படி இருக்கு?

கன்னத்துடன் கன்னம் வைத்து 

அமலா பால் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிக்கும் விஜய்

மிஸ் யூ விஜய்

படிப்பிடிப்பு முடிந்துள்ளதால் அமலா பால் தலைவாவை மிஸ் பண்ணுகிறாராம்.
முத்தம் கொடுக்கிறாரா?

 விஜய் முத்தம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடி இருக்கும் அமலா.

சந்தானத்துடன் விஜய்

 சந்தானம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை விஜய் இந்த பார்வை பார்க்கிறாரே
விஜய்யுடன் விஜய் 

இளைய தளபதிக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் விஜய்.
கொஞ்சம் சிரிங்க விஜய்

 என்னெவென்று தெரியவில்லை இரண்டு விஜய்யுமே சீரியஸா இருக்காங்கப்பா.









Monday, May 20, 2013

விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை…!

thuakkteam20513_mகடந்தாண்டு வெளிவந்த படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த படங்களில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படமும் ஒன்று. விஜய்க்கும் சரி, முருகதாஸ்க்கும் சரி வணிக ரீதியாக பெரும் வெற்றியை கொடுத்த படம் இது. அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் டி.வி., சார்பில் வழங்கப்பட்ட விருத‌ில், இப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸூம், விஜய்யும் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளனர் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளன. அது எந்த மாதிரியான படம், யாரும் ஹீரோயின் என்ற விபரம் எல்லாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ள இப்படத்திற்கு கொலவெறி அனிரூத் மட்டும் இசையமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அனிரூத் கூறியுள்ளதாவது, ஆமாம், விஜய்-முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திற்கு நான் இசையமைக்க இருக்கிறேன். இதுதொடர்பாக அவர்களை சந்தித்து பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது பற்றி வெளியான செய்தி தவறானது என்றும், விஜய் படம் உட்பட மிகப்பெரிய படங்கள் கைவசம் நிறைய இருப்பதால் தற்போது இசையில் மட்டுமே தனது முழு கவனமும் இருப்பதாக கூறியுள்ளார்.
அனிரூத் இசையமைப்பில் வெளிவந்த இரண்டு படங்களின் (3, எதிநீச்சல்) பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கோலிவுட் இயக்குனர்களின் பலரது பார்வை இப்போது அனிரூத் பக்கம் திரும்பியிருக்கிறது. அந்தவகையில் முருகதாஸின் பார்வையும் இப்போது அவர் பக்கம் திரும்பியுள்ளன. முன்னதாக முருகதாஸ் இயக்கிய கடைசி மூன்று படங்களான கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் ரிலீஸ் விஜய், சூர்யா படங்கள் போட்டி

eb060a72-b90a-4687-8630-12c118238010_S_secvpf.gifவிஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும், ஒரே நாளில் ரிலீசாகி மோதப்போகின்றன. இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிங்கம்-2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ரிலீசான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
தலைவா ரிலீசாகும் தேதியில் சிங்கம்-2 படத்தையும் வெளியிடுவதற்காக ரீ ரிக்கார்டிங், டப்பிங் போன்ற இறுதி கட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ஒன்றாக ரிலீசாகி பல நாட்கள் ஆகின்றன. எனவே இப்படங்களின் ரிலீசை கட் அவுட், கொடி, தோரணம் என போட்டி போட்டு கொண்டாட விஜய், சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அடுத்தமாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படங்கள் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, May 17, 2013

Thalaiva song Maama un ponnakkudu

Thalaiva song Engita Mothathe

விஜய் ரசிகையான நடிகை

img1130516044_1_1மலையாள கரையோரத்திலிருந்து வந்த நடிகை பூர்ணா. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் ஷக்திக்கு ஜோடியாக ‘படம் பேசும்’, ’உண்மையிலேயே இந்தப் படம் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார் இயக்குனர்’. அதையடுத்து, அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து ‘தகராறு’ படம். அப்புறம் ‘அர்ஜூணன் காதலி’ இதில் என்னுடன் ஜெய் நடிக்கிறார்.
இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களம். அடுத்து, ‘ஜன்னல் ஓரம்’ இதுவும் எனக்கு ஸ்பெஷல் படம்தான். இவை எல்லாவும் விட, விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனக்கு லட்சியமாகவே இருக்கிறது அந்த அளவுக்கு நான் அவரின் அதி தீவிர ரசிகை.’ என்கிறார்.

Thursday, May 16, 2013

ஜில்லாவில் விஜய்க்கு 17 வயது 'போராளி' தங்கச்சி

Niveda Thomas Is Vijay Sister Jilla ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம். இது குறித்து நிவேதா கூறுகையில், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.