
கோயம்புத்தூர், ஊட்டி, அந்தமான், ஆம்ஸ்டர்டாம் என்று பறந்து பறந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ஷங்கர். அவரது கேரியரில் மிக வேகமாக தயாராகி விரும் படமிது. அதற்கேற்ப ஜீவா, ஸ்ரீகாந்த், விஜய், இலியானா என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பாடல்கள் வழக்கம் போல் மிகப் பிரமாண்டம்.
மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவது என்பதில் தயாரிப்பாளர் தரப்பு உறுதியாக இருக்கிறது. முக்கியமாக பட வேலைகள் அதற்கு முன் முடிந்துவிடும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரோ.
No comments:
Post a Comment