இதுபற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், அதுபோன்ற முத்தக்காட்சியில் நடிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார். ”வேலாயுதம்” படத்தில் விஜய்யின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் தான் நடித்தேன். உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடிப்பதை நானும் விரும்ப மாட்டேன். விஜய்யும் விரும்ப மாட்டார் என்று ஹன்சிகா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு ஆண் நண்பர்கள் கிடையாது. காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவேன். மாலை 6 மணிக்கு போய்விடுவேன். இரவு 9 மணிக்கு படுத்து தூங்கிவிடுவேன். எனக்கு தூங்குவதற்கு ரொம்ப பிடிக்கும்.
நடிகை குஷ்புவைப் போல நான் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். இங்கே நிறைய பேர் என்னை, சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு நிறைய சந்தோஷம் என்றார்.
No comments:
Post a Comment