"த்ரீ இடியட்ஸ்" இந்தி படத்தில் கரீனா கபூர் நடித்த கதாபாத்திரத்தில், தமிழ் ரீமேக் படமாக வெளிவரும் "நண்பன்" படத்தில் நாயகியாக இடையழகி இலியானா நடித்துள்ளார்.
"த்ரீ இடியட்ஸ்" படத்தை பார்க்க என் சகோதரி வற்புறத்தி அழைத்தாள். அதனால் போய் பார்த்தேன். இயக்குனர் ஷங்கர், இந்த ரீமேக் படத்தை இயக்குகிறார் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
திரைக்கதையில் நிறைய மாற்றங்களை இயக்குனர் ஷங்கர் செய்துள்ளார். அப்படியே ரீமேக் செய்யவில்லை. வேற மாதிரி இலியானாவை "நண்பன்" படத்தில் பார்க்கலாம்.
படப்பிடிப்பு தளத்தில் ஷங்கர் சார் ரொம்ப சீரியசாக படம் பண்றவர் என நினைத்திருந்தேன். ஆனால், நடந்ததே வேறு. அவ்வளவு எளிமையாக, ஜாலியாக எல்லோரிடமும் பழகினார். சினிமாவை அறிவுபூர்வமாக அலசியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் என்று இலியானா கூறியுள்ளாராம்.
No comments:
Post a Comment