Tuesday, March 5, 2013

விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக படத்தை......

அஜீத், விஜய் நடித்தாலும் கதை சரியில்லை என்றால் படம் ஓடாது என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார். விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது நினைத்தது யாரோ படத்தை எடுத்து வருகிறார். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கும் அவர் கார்த்திக், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத் குமார் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடித்த பெரிய ஹீரோக்களுக்கு படம் ஓடியது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பெயரும் கிடைத்தது.

பூவே உனக்காக 
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இப்போது பார்த்தாலும் விஜயின் நடிப்பை பாராட்டத் தோன்றும். விஜயின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது என்று கூட கூறலாம்.



No comments:

Post a Comment