தலைவா படத்தில் எனக்குத்தான் முக்கிய வேடம் - ராகினி நந்த்வானி
விஜய் நடிக்கும் தலைவா படத்தில் எனக்கு முக்கியத்துவம் அதிகம். 2வது முக்கிய பாத்திரமே நான்தான், என்கிறார் அதில் விஜய்க்கு ஜோடியாக வரும் ராகினி நந்த்வானி. ஏஎல் விஜய் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தலைவா பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் அமலா பால் அறிவிக்கப்பட்டார். படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில், அமலா பாலுக்கு நிகரான வேடத்தில் இன்னொரு நாயகியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தனர். அவர் ராகினி நந்த்வானி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர இவர். விஜய்யின் மும்பை காதலியாக வருகிறார். இவரும் விஜய்யும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஆஸ்திரேலியாவில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதிலும் ராகினி நடிக்கிறார். விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து ராகினி கூறுகையில், "தலைவா பட வாய்ப்பு கிடைத்தது எதிர்ப்பாராத இனிய அதிர்ச்சி. இந்தப் படத்தில் என் வேடம் மிகவும் எளிதானது. காரணம் நான் ஒரு வட இந்திய பெண்ணாகவே இதில் நடித்தேன். எனது வசனங்கள் முழுவதும் இந்தி தான். ஒவ்வொரு முறையும் விஜயுடன் நடிக்கும் போது எனக்கு படபடப்பாக இருக்கும். இந்த படத்தில் நான் ஏதோ வந்து போகும் கதாபாத்திரம் அல்ல. படத்தின் 2-வது முக்கிய கதாபாத்திரம். விஜயுடன் ஒரு பாடலில் கூட நடித்துள்ளேன். விஜய் மிகவும் எளிமையானவர். நம்பிக்கைக்கு உரியவர்," என்றார். இந்த இரண்டாவது ஹீரோயின் விவகாரமே அமலா பாலை கடுப்பேற்றியிருந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு பேட்டி!
No comments:
Post a Comment