Wednesday, September 11, 2013

அமைதிதான் என் ஆயுதம்… விஜய்

தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 

இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விஜய் அண்ணா 


நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.

அழுத ரசிகை 

விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.


அமைதி ஏன்?

 தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.


என்ன ரேட்டிங்? 

தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.


ஜி.வி.பிரகாஷ் 

பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.


அமலாவின் கண்கள் 

நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.

குட்டி ரசிகர்கள் 

இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.

No comments:

Post a Comment