Wednesday, September 18, 2013

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி
முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டாலும் பிரச்சினை... கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை. எதுக்கு வம்பு என்று இமயமலைக்கு பறந்துவிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரன். 

தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும். 

கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா. 

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. 

இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம். 

இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். 

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். 

விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!


No comments:

Post a Comment