Wednesday, February 6, 2013

சென்னை மற்றும் புறநகர்களில் 50 அரங்குகளில் விஸ்வரூபம்!

06-viswaroopam8-300

சென்னை: நாளை சென்னை மற்றும் புறநகர்களில் 50 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபத்தை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளதால், இந்தப் படத்தை மேலும் 50 அரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்கள் பேசி வருகின்றனர். கமல் படங்களில் தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியான படம் என்ற பெருமை விஸ்வரூபத்துக்கே உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் அதிக அரங்குகளில் வெளியான சாதனையை ரஜினியின் எந்திரன்தான் வைத்துள்ளது. இந்தப் படம் அன்றைக்கு சென்னையில் 44 அரங்குகளிலும், புறநகர்களில் 40 அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 805 அரங்குகளிலும் வெளியாகி சாதனை படைத்தது. விஸ்வரூபத்துக்கு டிக்கெட் முன்பதிவுகள் நேற்று துவங்கின. பல தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வில்லிவாக்கம், மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஏ.ஜி.எஸ். தியேட்டரில் 7 திரைகளில் 28 காட்சிகள் திரையிடப்படுகிறது. வடபழனி கமலா தியேட்டர் அசோக்நகர் உதயம் தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் அதிக ஸ்க்ரீன்கள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பிவிஆர், சத்யம், எஸ்கேப், எஸ் 2 பெரம்பூர், எஸ் 2 திருவான்மியூர், பேம் நேஷனல் போன்ற அரங்குகளில் முதல் ஒரு வாரத்துக்கு அதிக திரைகளில் இந்தப் படத்தைக் காட்ட உள்ளனர். அதன் பிறகு டிடிஎச்சில் படம் வெளியாகிவிடும் என்பதால் முடிந்தவரை முதல் வாரம் அதிக திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.

No comments:

Post a Comment