மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின. இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, “இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது,” என்றார். முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார். விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.Thursday, February 28, 2013
மீண்டும் முருகதாஸுடன் இணைகிறார் விஜய்.. ஆனால்..!
மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின. இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, “இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது,” என்றார். முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார். விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment