'ஜெயம்' ராஜாவின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'.
இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்படிப்பில் உள்ளது. இதில் 5000 துணை நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். 'வேலாயுதம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, கொச்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுத்து வருகிறார் 'ஜெயம்' ராஜா.

இதில் 5000 துணை நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். பதினைந்து நாட்களுக்குள் இந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார். இதன்படி பார்த்தால் 'கில்லி' படத்தில் கபடி ஆட்டம் கிளைமாக்ஸாக வருவது போல், இந்த மைதானத்தில் விஜய்யின் 'வேலாயுத' ஆட்டத்தை கிளைமாக்ஸ் காட்சியாக எடுத்து வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
வெகு விரைவில் அது என்ன ஆட்டம் என்பது தெரியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்
No comments:
Post a Comment