“வேலாயுதம்”, ”நண்பன்” ஆகிய படங்களை அடுத்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ”மழை நேர மழைத்துளி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அப்படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இயக்குநர் சீமானிடம் கேட்டபோது:
தம்பி விஜய் இப்போது ‘நண்பன்’ படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படம் முடித்தவுடன் எனது இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார்.
எனது இயக்கத்தில் தம்பி விஜய் நடிக்கமாட்டார் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது.
படப்பிடிப்பு தொடங்கும் திகதி தெரிந்தவுடன் தான் நாயகி யார், வேறு நடிகர்கள் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது ஒப்பந்தம் செய்யப்படும்.
தம்பி விஜய்க்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமைய இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment