அஜீத்தின் நாயகிகளாக ஹூமா குரேஷி மற்றும் ப்ரூனா அப்துல்லா என இருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை ஏப்ரல் 2012 வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அஜீத்தை அடுத்து இயக்குவது யார் என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் :
அஜீத் நடித்த 'கிரீடம்' படத்தை இயக்கியதில் இருந்து இயக்குனர் விஜய் - அஜீத் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறதாம்.முன்னதாக அஜீத்தின் 50 வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்த போது இயக்குனர் விஜய் தான் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அஜீத்தின் 50 வது படமான 'மங்காத்தா'வை வெங்கட் பிரபு இயக்கினார். 'மங்காத்தா' முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போது அஜீத்தும் இயக்குனர் விஜய்யும் அடிக்கடி சந்தித்து விவாதித்து வருவதாகவும். கூடிய விரைவில் இணையக் கூடும் என்ற கூறுகிறார்கள்.
பில்லா - 2 படத்தை அடுத்து அஜீத்தை இயக்குவது யார் என்ற லிஸ்ட்டில் விஜய் தான் முதலில் இருக்கிறார் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment