டைரக்டர் சீமான் அரசியல் களத்தில் பிஸியாக இருந்தாலும், விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி, அந்த படத்திற்கு பகலவன் என்று பெயரிட்டார்.
பின்னர் பகலவன் என்று டைட்டிலை கோபம் என மாற்றினார் சீமான். அதேபோல் பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்திலும் கோபத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதியதாக சிறையில் இருந்து வெளியே வந்த சீமானே தெரிவித்தார்.
எனவே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசுக்கு ஏற்ப சில டயலாக்களை மாற்றும்படி சீமானிடம் விஜய் கேட்டிருக்கிறார். சீமானும் ஆளும்கட்சிக்கு ஆதரவான சில வசனங்களை தயார் செய்து கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் கோபம் ஆன பகவலன் ட்ராப் ஆகி விட்டதாக புதிய செய்தியன்று வெளியாகியிருக்கிறது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டிய சீமானும், விஜய்யும் தொடர்ந்து மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment