Sunday, June 30, 2013

யூ டியூபை சினிமா நம்பலாமா?

img1130629016_1_1ஃபர்ஸ்ட் காப்பி முடிந்ததும் பிரதியை சாமிக்கு முன் வைத்து கும்பிடுகிறார்களோ இல்லையோ… ட்ரெய்லர் கட் செய்து யூ டியூபில் ஏற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் பார்த்தார்கள், எட்டு லட்சம் பேர் லைக்கினார்கள், பத்து லட்சம் பேர் ஷே‌ரினார்கள் என்று ஒரே புள்ளிவிவர கணக்குகள்.
விஜய்யின் தலைவா படத்தின் ட்ரெய்லரை போட்ட உடனே பத்து லட்சம் பேர் பார்த்தார்களாம். அ‌ஜீத்தின் புதிய பட ட்ரெய்லர் அதை தாண்ட வேண்டும் என அவ‌ரின் ரசிகர்கள் இப்போதே கீ போர்டை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் என்றால், பெயர் தெ‌ரியாத ஹீரோக்களின் படங்களுக்கும் யூ டியூப் புள்ளி விவரங்கள்தான் விளம்பரத்துக்கு உதவுகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆ‌ரி (சட்டுன்னு பார்த்தால் தாடியும் மீசையுமாக கும்கி விக்ரம் பிரபு போலவே இருக்கிறார்) ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இதுவரை அஞ்சு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் யூ டியூபில் பார்த்திருக்கிறார்களாம். படம் ஹிட்டாகும் என்பதற்கு இந்த புள்ளி விவரத்தைதான் தூக்கி முன்னால் போடுகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு நடிகையை பார்க்க வரும் கூட்டம் வோட்டு போடும் என்று நம்புவதை போலதான் இதுவும். யூ டியூபில் ட்ரெய்லர் பார்த்தவர்கள் அதே டியூபில் மொத்தப் படத்தையும் பார்க்க ஆசைப்படுவார்களே… இந்த கோணத்தில் ஏன் இன்னும் யோசனை பண்ணலை?

No comments:

Post a Comment