Thursday, June 6, 2013

விஜய் சினிமா பயணம்: நாளைய தீர்ப்பு டூ தலைவா

இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் 39 வது பிறந்தநாளை இன்னும் சில தினங்களில் கொண்டாடப் போகிறார். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த விஜய் சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க படங்கள் மட்டுமே அவரை நடிகராக நிரூபித்தது. 

நாளைய தீர்ப்பில் தொடங்கிய பயணம் தலைவா, ஜில்லா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக 6 படங்கள் வரை நடித்த விஜய், கல்லூரி பருவ மாணவராக நடித்த நாளைய தீர்ப்பு தமிழக சினிமா ரசிகர்களிடையே பேச வைத்தது.

 தமிழ் சினிமாவில் முதலில் இருப்பை தக்க வைக்க எடுக்கப்பட்ட படங்கள் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற படங்கள் அதீத மசாலாத்தனங்கள் இருந்தன இதனாலேயே பெண் ரசிகைகள் விஜய்க்கு கிடைக்க சில நாட்கள் ஆனது.

 சில வருடங்களில் சுதாரித்த விஜய் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். இதில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற வைத்த படங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.




பூவே உனக்காக 

ராஜா மசாலாப்படங்களுக்கு இடையே விக்ரமன் இயக்கத்தில் ராஜாவாக நடித்த பூவே உனக்காக படம் சூப்பர் ஹிட் வெற்றி விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

லவ் டுடே 

காதல் என்று சுற்றிய இளைஞன் பொறுப்பான இளைஞனாக மாறி அட்வைஸ் செய்த படம் லவ் டூடே. இளைஞர்களை மட்டுமல்ல இளம் பெண்களையும் கவர்ந்தார் விஜய்.


ஒன்ஸ் மோ

ர் விடலைப் பருவக் குறும்புகள் கொண்ட விஜய் நடித்த ஒன்ஸ் மோர் ரசிகர்களை ரசிக்க வைத்தது.


காதலுக்கு மரியாதை

 காதலர்கள் மீது மரியாதை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. ஜீவா என்று இளம் பெண்கள் உருகியிருக்கின்றனர். சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருது பெற்றார் விஜய்.


பிரியமுடன் வில்லன் 

எத்தனை நாள்தான் ஹீரோவாக நடிப்பது கொஞ்சம் வில்லத்தனம் செய்வோமே என்று விஜய் நடித்த பிரியமுடன் படத்தை வெற்றி பெற வைத்தனர் ரசிகர்கள்.

குஷி

இளசுகளை ரசிக்க வைத்த குஷி சிவா உற்சாகமாக, ஜாலியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதுவரை இப்படி ஒரு விஜய் படத்தை பார்த்ததே இல்லை என்று பேசினர் ரசிகர்கள்.
திருமலை 

மென்மையான நாயகனாக இருந்த விஜய் ஆக்சன் அவதாரத்தில் வெற்றி பெற்ற படம் திருமலை.



சொல்லியடித்த கில்லி 

ஆக்சனுடன் காமெடியும் கலந்து நடித்த கில்லி சொல்லியடித்தது. விஜய் வெற்றிப் பாதையில் தனி ரூட் போட்டது.

போக்கிரி 

பெரிய வெற்றி ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு பிரபுதேவா இயக்கத்தில் அமைந்த படம்தான் போக்கிரி.

காவலன் 

அதிரடியில் இருந்து அமைதியான விஜய், நடிப்பில் தனி முத்திரை பதித்த படம் காவலன். அதன்பின்னர் நடித்த வேலாயுதமும் வெற்றிப் படமானது.



நண்பன் 

நண்பனில் தனி நடிப்பை வெளிப்படுத்திய விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் என்றே கூறலாம். துப்பாக்கியில் ராணுவ வீரனாக நடித்தும் அசத்தினார் விஜய்.

தலைவா

 இப்போது நடித்துக் கொண்டிருக்கும், தலைவா, ஜில்லா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் கூட.


No comments:

Post a Comment