Tuesday, August 13, 2013

தலைவா - வெளிநாடு - பிற மாநிலங்களில் நல்ல ஓபனிங்... ரூ 10 கோடி வசூல்!

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் தலைவா படத்துக்கு மற்ற தென் மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

முதல் மூன்று நாட்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ரூ 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். 

ரம்ஜான் விடுமுறையில் வெளியானதால், எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி முதல் மூன்று நாட்களும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

கேரளாவில்... 


கேரளாவில் இதுவரை விஜய் படங்களுக்கு கிடைக்காத வசூல் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரவிக்கின்றன. இங்கு 105 அரங்குகளில் வெளியான தலைவா, முதல் மூன்று தினங்களில் ரூ 2.10 கோடி வசூலித்துள்ளது.
'தலைவா' ரிலீஸ் செய்தால் 'தலை' இருக்காது: மிரட்டிய தமிழ் இளைஞர் மாணவர் படை!
ஆந்திராவில்... 

ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் டப் செய்யப்பட்டும், சில அரங்குகளில் தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்ட தலைவா நான்கு நாட்களில் ரூ 2.25 கோடியை வசூலித்துள்ளது.


கர்நாடகாவில்தான் அதிகம் 

கர்நாடகத்தில்தான் அதிகமாக வசூலித்துள்ளது தலைவா. பெங்களூர், மைசூர், ஹஸன், கேஜிஎப், மாண்டியாவில் வெளியான இந்தப் படம் நான்கு தினங்களில் ரூ 2.55 கோடியை வசூலித்துள்ளது.
வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில்... 

வெளிநாடுகளைப் பொருத்தவரை பிரிட்டனில் ரூ 78 லட்சமும், அமெரிக்கா - கனடாவில் ரூ 1.29 கோடியும் இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


ரூ எண்பது கோடிக்கு... 

ரூ 35 கோடிக்குத் தயாரான தலைவா படம் ரூ 80 கோடி வரை விற்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூலம் இதுவரை உலகமெங்கும் ரூ 10 கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களில் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்குப் பங்கு எதுவும் கிடைக்காது. காரணம், அதை அவுட்ரைட் அடிப்படையில் ஆரம்பத்திலேயே விற்றுவிட்டனர். தமிழகத்தில் மட்டுமே மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்றனர்.





No comments:

Post a Comment