Thursday, May 19, 2011

ஈழ அகதியாக நடிக்கும் விஜய்



ஆதிமுக கடந்த தேர்தலின் போது ஈழவிடுதலை போராட்டத்துக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிரானா நிலைபாட்டில் இருந்து வந்தது. ஆனால் மே18 2010 சம்பவத்துக்கு பிறகு தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஈழ ஆதரவுக் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
 
சீமான் இயக்கத்தில், தாணு தயாரிப்பில், விஜய் ஈழ அகதியாக தமிழகத்துக்கு வந்து, படித்து டாக்டராகும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கதையான பகலவனை ஆகஸ்டில் தொடங்க இருக்கிறார்கள். அதேபோல இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்க இருக்கும் ஈழமக்களின் வாழ்கை முள்வேலி வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணீர் கதையை, தற்போது அவர் படமாக்கி வரும் தலைப்புச் செய்திகள் படத்துக்குப் பிறகு இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷால் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
 
அடுத்து தங்கர்பச்சான் மே18 சம்பவங்களை பின்னணியாக வைத்து தொலைந்துபோனவர்கள் படத்தை கனடா வாழ் தமிழரின் நிதி உதவியுடன் இந்த ஆண்டு மழைக்காலத்தில் சத்தியமங்கலம் காட்டில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். இதற்காக வனத்துறை அனுமதிக்காக விண்ணபிக்க இருக்கிறாராம்.

அடுத்து ஈழ தமிழர்களின் போராட்ட வாழ்கையையும், தமிழகத்தோடு அவர்களுக்கு இருந்த தொடர்பையும் பேசிய படம் காற்றுக்கென்ன வேலி. இந்தப் படத்தை  இயக்கிய புகழேந்தி தங்கராஜ், தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இதில் சத்யராஜ் ஹீரோ. இன்னொரு முக்கியமான கேரக்டரில் நாசர் நடிக்கிறார். கதையை கேட்ட நாசர்,  ஈழப்போராட்டத்தில் இந்தப்படம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும். எனவே எனக்கு இந்தப்படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். இந்தப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

No comments:

Post a Comment