Wednesday, August 3, 2011

அஜீத் விஜய்யை பின்னுக்கு தள்ளும் விமல்


ajith-vijay-02-08-11
அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இவ்விரு படங்களும் முறையே ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 30 தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்றபட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்பும் தலயின் மங்காத்தா மற்றும் தளபதியின் வேலாயுதம் இந்த இரண்டிலும்தான். ஆனால் தமிழ் சினிமாவில் மூழ்கி முத்தெடுக்கும் பல ஆராய்சியாளகளின் கணிப்பு என்னவென்றால் இந்த இரண்டு படங்களுக்களின் ரிலீஸ் தேதிகளுக்கு இடையே, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் ரிலீசாகவிருக்கும்  'வாகைசூடவா' படம் ஒரு கருப்பு குதிரையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். பொருத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment