Monday, August 15, 2011

அனைவருக்கும் கல்வி… விஜய்யின் சுதந்திர தின ஆசை

அனைவருக்கும் கல்வி வசதி அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளைத் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் கூறுகையில், “இந்தியாவில் நூறு சதவித மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். இதன் மூலம் வேலையின்மை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது என் விருப்பம்.
ஒவ்வொரு வருடமும் நான் இலவச நோட்டு புத்தகங்கள் சீருடைகள், ஏழைகளுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றை வழங்கி வருவதன் காரணம் இதுவே.
பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம். இதற்காக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் கூறுகையில், “நாட்டில் ஊழல் முற்றாக ஒழிய வேண்டும் என்பதுதான் எனது சுதந்திர தின ஆசை” என்று கூறியுள்ளார்.
தமன்னா கூறுகையில், “நன்கு படித்தவர்கள் உள்ள இந்த நாட்டில்தான் குற்றங்களும் வழக்குகளும் அதிகமாக உள்ளன,” இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
நடிகை த்ரிஷா இப்படிச் சொல்கிறார்:
சுதந்திரம் எத்தனை அற்புதமான விஷயம் என்பது அனுபவிக்கும்போதுதான் புரிகிறது. நமது முன்னோர்களுக்கு நன்றி. நல்ல சிந்தனைகள் பெருக வேண்டும். அப்போதுதான் சமூகக் குற்றங்கள் குறையும், என்றார்.

No comments:

Post a Comment