Tuesday, August 2, 2011

இது ஆகஸ்ட் கொண்டாட்டம் -அஜீத், விஜய், சூர்யா பட ஆடியோ ரிலீஸ்


ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை ரசிகர்களுக்கு முப்பெரும் விழா காலமாகMIOTஇருக்கும். அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு படங்களின் பாடல் வெளியீட்டு விழா இந்த மாதத்தில்தான் நடைபெற இருக்கிறது. 10 ந் தேதி மங்காத்தா, 15 ந் தேதி வேலாயுதம், 20 ந் தேதி ஏழாம் அறிவு என்பதுதான் இதுவரை சொல்லப்படும் திட்டம்.
இது கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டது என்றாலும், மங்காத்தாவில் மட்டும்தான் அதிக ஊசலாட்டம் என்கிறார்கள். விழா சிம்பிளாக நடக்கட்டும் என்று அஜீத் சொல்வதாலும், படத்தை உடனடியாக கைமாற்றிவிடுகிற திட்டத்தில் துரை.தயாநிதி இருப்பதாலும்தான் இந்த ஊசலாட்டமாம்.
மற்றொரு ஊசலாட்டம் சூர்யா படத்திற்கு. ஏழாம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தேதி குறித்தாலும், நில மோசடி வழக்கு ஒன்றில் இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனால் விழா நடைபெறும் சில தினங்களுக்கு முன் வரை என்ன நடக்கும் என்பதையும் யூகிக்க முடியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
எல்லாரும் சேர்ந்து, ரசிகர்களை ஏமாத்திராதீங்க ஸ்டார்ஸ்

No comments:

Post a Comment