Wednesday, June 8, 2011

"முதல்வரிடம் எதுவும் கேட்கமுடியாது", விஜய்


jayalalitha-vijay-06-06-11

ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் நடந்தவுடன் தமிழ் திரையுலகம் சார்பாக புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. இந்நிலையில் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக பாராட்டு விழா ஏற்பாடு செய்ய முதல்வரை தொடர்பு கொண்ட போது க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "சினிமா சம்பந்த பட்ட விழாக்களுக்கு எதற்கும் அழைக்கவேண்டாம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லப்பட்டதாம், உங்கள் பணிகளை எந்தவிட இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக செய்யுங்கள்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசயம் இவ்வாறு இருக்க சில சினிமா புள்ளிகள் விஜய் மூலம் முதல்வரை அழைக்கலாம் என்ற ஐடியாவுடன் விஜய்யை அனுக, அவரோ "முடியவே முடியாது" என்று சொல்லிவிட்டாராம்.

No comments:

Post a Comment