இப்போதெல்லாம் மும்பையில் இருப்பதை விட சென்னை-ஹைதராபாத்-பெங்களூர் என தென்னிந்திய நகரங்களில்தான் அதிகம் காணப்படுகிறார் நடிகர் சல்மான்கான்.கடந்த வாரம் முழுவதும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தென்னிந்தியாவில் முகாமிட்டிருந்த சல்மான், இன்று சென்னை வருகிறார்.
பிரபல வில்லன் நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்சி விஜயன் தனது மகன் சபரீஸை மார்க்கண்டேயன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அமைந்தகரையில் உள்ள பி.வி.ஆர். மல்டிப்ளெக்ஸில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இப்பட விழாவில் சல்மான்கான் பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
விழாவில் பங்கேற்று விட்டு இரவே மும்பை திரும்புகிறார். அவருடன் நடிகர் விஜய், நடிகை ஸ்ரேயா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து பெப்சி விஜயன் கூறுகையில், "சல்மான்கான் எனது நீண்ட நாள் நண்பர். அவரது பெரும்பாலான படங்களுக்கு நான்தான் ஸ்டன்ட் மாஸ்டர். சண்டை காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவார். என் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்வது பற்றியும் அப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை நடத்துவது பற்றியும் அவரிடம் சொன்னேன். நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறி வருகிறார்...", என்றார்.
No comments:
Post a Comment