Wednesday, June 8, 2011

கென்டிட் கமெரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நண்பன் குழு


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்து வரும் படம் "நண்பன்". இப்படத்தை ஷங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது சென்னையில் சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரைச் சாலை, ஓட்டல் லீ ராயல் மெரிடியன், பெருங்குடி, கிண்டி கத்திபாரா மற்றும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.
"எந்திரன்" படப்பிடிப்பின் போதே கூட்டம் கூடி விட்டதால் இந்த முறை மக்களுக்கே தெரியாமல் "கென்டிட் கமெரா" மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம். தற்போது கூட ஒரு கார் சேஸிங் காட்சியை இந்த கமெரா மூலம் படமாக்கி இருக்கிறார்.
விஜய்க்கு இந்த வருடம் ஹாட்ரிக் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். முதலில் "காவலன்", ஜூலையில் "வேலாயுதம்", தீபாவளிக்கு "நண்பன்" என இந்த வருடம் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment