Tuesday, April 26, 2011

14 வில்லன்களுடன் மோதும் விஜய்


விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா நடித்து வரும் படம் 'வேலாயுதம்'. விஜய் ஆண்டனி இசையமைக்க ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி ஷிண்டே என பலர் நடித்திருக்கிறார்கள். இது போதாதென்று மும்பையில் இருந்து 14 வில்லன்களை இப்படத்திற்காக களம் இறக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து ஆஸ்கார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. விஜய் ஒரு பால்காரனாக நடித்து இருக்கிறார். சரண்யா மோகன் விஜய்க்கு தங்கையாக நடித்து இருக்கிறார். ஜெனிலியா பத்திரிகையாளராகவும், ஹன்சிகா விஜய்க்கு காதலியாகவும் நடித்து இருக்கிறார்கள். 5 பாடல்கள் மற்றும் 6 சண்டை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்து இருக்கிறார்" என்று கூறியுள்ளனர்.வேலாயுதம் விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment