Monday, April 25, 2011

விஜய் அஜித் சூர்யாவுடன் கை கோர்க்க தயாராகும் விக்ரம்


ஐ.நா சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் து£தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் விக்ரம். தனது விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை மூலமாக தமிழகம் முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார் அவர். இந்த லட்சியத்திற்கு ‘பச்சை புரட்சி’ என்று பெயரிட்டிருக்கிறார் விக்ரம்.
இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அவர். மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம் என்றொரு பழமொழி உண்டு. அதை நிரூபிக்கிற வகையில் ஏராளமான கேள்விகளை கேட்டார்கள் சில புத்திசாலி நிருபர்கள். ஒரு மனிதன் சமூக அக்கறையோடு சில விஷயங்கள் செய்யும்போது அதை உற்சாகப்படுத்தும் நோக்கம் சிறிதும் இல்லை அந்த கேள்விகளில்.
சாலையோரத்தில் ஏதோ கடமைக்காக மரத்தை நட்டோம் என்பது போல இருக்காது இந்த திட்டம். நில உரிமையாளர்களால் தாமாகவே முன்வந்து தரப்படும் காலி நிலங்கள், சாலை விரிவாக்கத்தில் சிக்காத இடங்கள் இவற்றை தேர்வு செய்து மரங்கள் நடுவோம். அது வளர்கிற வரை பராமரிப்பதுதான் எங்கள் திட்டம் என்று தெளிவாகவே கூறினார் விக்ரம். அப்படியிருந்தும் அஜீத் கூடதான் இப்படி மரங்களை நட்டார். ஆனால் அவற்றையெல்லாம் பிளாட்பாரம் கட்டுவதற்காக பிடுங்கி எறிந்துவிட்டார்களே என்றார் ஒரு நிருபர்.
சிக்னலில் பிச்சை எடுக்கிறார்களே, அதை தடுக்க மாட்டீங்களா என்றார் மற்றொருவர். ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விக்ரம்தான் அநாதை ரட்சகர் என்பது போல இவர்கள் எழுப்பிய கேள்விகளை சற்று சிரமத்தோடுதான் எதிர்கொண்டார் விக்ரம்.
அவர் பேசியதிலேயே மிகவும் பிடித்த விஷயம் இவ்விரண்டும்தான். இந்த மரக்கன்றுகள் என் ரசிகர் மன்றத்தினரால் பராமரிக்கப்படும்! அஜீத், விஜய், சூர்யா ஆகியோரிடம் இது குறித்து பேசி அவர்களையும் என்னுடன் இணைத்துக் கொண்டு செயல்படுவேன்!
பெற்றோர்களால் படிக்க வைக்க முடியாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்வியை தொடர வழி செய்வதையும் ஒரு லட்சியமாக வைத்திருக்கிறார் விக்ரம்.

No comments:

Post a Comment