Thursday, April 14, 2011

விஜய் எனக்கு நண்பர், பிரபு தேவா என் அண்ணன்: ஹன்சிகா மொத்வானி


தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே இணைந்து நடிப்பதுக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா மொத்வானி
இவர் இரண்டு அல்லது மூன்று ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதில்லை என்றும் ஹன்சிகா மொத்வானியின் கொள்கை.
இதை படத்தயாரிப்பு வட்டாரத்திடமும் சொல்லியிருக்கிறாராம், ஆனால் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் மட்டும் ஜெனிலியா உடன் சேர்ந்து நடித்துள்ளார்.
மாப்பிள்ளை படத்தில் தனுஷ், எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவி என இணைத்து நடித்தவர், தமிழ் சினிமாவின் வெற்றி படத்தயாரிப்பாளரான உதயநிதி ஹீரோவாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கோலிவுட் ஹீரோக்களில் விஜய்யின் நட்பை விரும்பும் ஹன்சிகா விஜய் எனக்கு நண்பர் என்றும் கூறியுள்ளாராம். டைரக்டர் பிரபு தேவாவின் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' படத்தில் நடித்த அனுபவத்தோடு ஹன்சிகா,'பிரபு தேவா, எனக்கு அண்ணன் மாதிரி.
எப்படியெல்லாம் சினிமாவில் டான்ஸ் பண்ணுவது என்று அவரிடமிருந்து கற்று கொண்டேன். அது மட்டுமில்லாமல் அவர் படம் இயக்குவதை கவனித்து சினிமாவையும் புரிந்து வைத்துள்ளேன் என்கிறாராம் ஹன்சிகா மொத்வானி.

No comments:

Post a Comment