Tuesday, April 26, 2011

ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் விஜய்!!!! வேலெடுத்து ஆடும் வேலாயுதம்

rajini-vijayசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பால்காரராக நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் அண்ணாமலை. இதுபோன்ற வேடத்தில் வேலாயுதம் படத்தில் விஜய் நடித்து வருகிறாராம்.
இதனால் ரஜினியைப் போன்றே தனக்கும் இந்த வேடம் நல்ல பெயரை வாங்கித தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம் விஜய்.
இப்படத்தில் ஒரு பாடல் மிகவும் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக ரூபாய் ஒரு கோடி செலவில் செட் அமைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஓட்டப் பந்தயக் காட்சியில் நடிகர் விஜய் உண்மையாலுமே ஓடி ஜெயித்திருக்கிறார். இதைப் பார்த்து யூனிட்டே கைதட்டியதாம். இப்படி பலதரப்பிலும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்தில் விஜயின் பல பரிமாணங்கள் வெளிப்படும் வகையில் அவரிடமிருந்து நடிப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறாராம் இயக்குனர் ஜெயம் ராஜா. கதாநாயகிகளாக ஜெனிலியாவும், ஹன்சிகாவும் நடிக்க, அவரது தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இவர்களது காட்சிகளும் பேசும்படி அளவிற்கு அமைத்திருக்கிறாராம்.
அப்ப வேலாயுதம் வேலெடுத்து ஆடும்னு சொல்லுங்க..!

No comments:

Post a Comment