
வருகின்ற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திருச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களைக் கொண்டு பெரும் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பாக விஜயின் தந்தை S.A. சந்திரசேகர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துப் பேசி “நீங்கள் அவசியம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்க, கேப்டனும் “என் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் கேப்டன், “விஜய் அரசியலில் இறங்கப் போவது குறித்து போன வருடமே என்னிடம் மீடியாக்கள் கேட்டனர். கண்டிப்பா விஜய் கட்சி ஆரம்பிக்கணும். அப்போதுதான் பெரிய தலைவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட சுயநலவாதிகளா இருக்காங்க என்பதை விஜய் கண்கூடா தெரிஞ்சுக்க முடியும்” என்றேன். ஆகையால் உங்கள் மாநாட்டுக்கு
கண்டிப்பா என் ஆதரவு உண்டு. நான் மாநாட்டில் கலந்துக்கிறத பத்தி வெளியில் சொல்ல வேண்டாம் என கேப்டன் கூறியிருக்கிறார். இதே போல S.A. சந்திரசேகர், சீமானையும் அழைக்க அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். விஜய் மாநாட்டில் விஜயகாந்தும், சீமானும் மேடை ஏறுவதால் அரசியல் களம் சூடாகிறது.

No comments:
Post a Comment