சிம்புவின் அலும்புவை கேள்விப்பட்டு பெரிய ஹீரோக்களே கொஞ்சம் வெலவெலத்துத்தான் போய் இருக்கிறார்கள்.
தபாங் படத்தின் தமிழ் ரீமேக்கில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்புகொண்ட சிம்பு, சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணனை இயக்குனராக போடுங்கள் என்றாராம் தயாரிப்பாளர் பெல்லகோண்டா ரமேஷிடம். ஆனால் தயாரிப்பாளரோ,தரணி கடந்த ஒன்றரை வருடமாக சும்மா இருக்கிறார். அவர்தான் இந்தக் கதைக்கு பொருத்தமான இயக்குனர். நாங்கள் அட்வான்ஸ் கொடுத்து விட்டோம் என்று கறாராக சொல்லிவிட்டார்களாம். பர்பெக்ஷன்,
ஸ்பீடு இவையெல்லாம் தன் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தரணி. சிம்புவை தனது அலுவலகத்துக்கு வரச்சொன்ன தரணி, படத்தை மூன்றே மாதங்களில் முடித்து விடலாம். ஆனால் கன்டிப்பாக நீங்கள் போலீஸ் கிராஃப் வெட்டியாக வேண்டும் என்று சொல்ல சிம்புவுக்கு செம ஷாக்!
தலைமுடியை வெட்டாமல் தபாங், வேட்டை மன்னன் இரண்டிலும் மாறி மாறி நடித்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். இப்போது தபாங் ரீமேகிற்காக தலைமுடியை ஒட்டவேட்டினால் வேட்டை மன்னன் தள்ளிப்போய்விடும் என்பதால்,
மூன்று மொழிகளில், ஹாலிவுட் தரத்துக்கு தயாராகும் வேட்டை மன்னனில் நடித்து விட்டு வந்துதான் தாபங்குக்காக தலைமுடி வெட்ட முடியும் என்று கறாராக சொல்லி விட்டாரம் யங் சூப்பர் ஸ்டார்.
தரணியும் நோ ப்ராப்ளம் சொல்லி விட்டு கேரளாவுக்கு கிளம்பி விட்டார். தனது அடுத்த படத்துக்கான கதையை உருவாக்க… அந்தக்கதை விஜய்காக என்கிறார்கள் தரணியின் உதவியாளர் வட்டாரத்தில்.

No comments:
Post a Comment