
மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடிக்கிறார். விஷால் நடிக்கிறார். விஜய்யும் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் உலா வருகின்றன. ஆனால் விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் அப்படியே.
நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய்.
ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் நண்பன் பட யூனிட்டில். அப்புறம் பார்த்தால்தான் அது பொன்னியின் செல்வன் என்பதே தெரிய வந்திருக்கிறது.
ஒருவேளை மணிரத்னத்தின் பிடியில் விஜய் சிக்கிக் கொண்டாரோ? சரித்திரக்கதையில் விஜய். நினைத்தாலே சிரிப்பு சிரிப்பாக வருகிறது.
No comments:
Post a Comment