தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இத்திரைப் படத்தை அரங்குகளில் பார்வையிட சனக் கூட்டம் அலை மோதுகின்றது.
குறிப்பாக திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன.
யாழ்ப்பாணத்திலும் காவலனுக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது.
கொழும்பில் சினி சிட்டி கொம்பிளேக்ஸில் உள்ள நான்கு தியேட்டர்களிலும், கொங்கோர்ட் தியேட்டரிலும் இப்படமே காண்பிக்கப்படுகின்றது. ஒரு நாளில் நான்கு தடவைகள் இத்தியேட்டர்களில் காவலன் காண்பிக்கப்படுகின்றது.
இது ஒரு நல்ல படம் என்று பொதுமக்கள் பேசுகின்றனர் என்கிறார் திருகோணமலையில் அமைந்திருக்கும் நெல்சன் சினிமா தியேட்டரின் முகாமையாளர்.
இது ஒரு வெற்றிப் படம் என்கிறார் வவுனியாவில் உள்ள வசந்தி சினிமா தியேட்டரின் மனேஜர்.
நடிகை அசினின் இலங்கை வருகையால் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகின்றது.

No comments:
Post a Comment