| இந்தி 'த்ரீ இடியட்சில்' கரீனா கபூர் நடித்த ஹீரோயின் ரோலில், தமிழில் ரீமேக்காக தயாராகும் 'நண்பன்' படத்தில் இலியானா, விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். |
| கோலிவுட்டில் 'கேடி' படத்துக்கு பிறகு தெலுங்கு பக்கம் பிசியான இலியானாவுக்கு 'நண்பன்' படத்தின் மூலமாக டைரக்டர் ஷங்கர் 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார். இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார் இலி. 'நண்பன் பட சூட்டிங் டெகராடுனில் நடந்தது. ஹீரோ விஜய்யுடன் இணைந்து நான் நடித்த முதல் காட்சியை என்னால் மறக்க முடியாது. விஜய்யோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு பிடிசிருந்தது. அவர் இப்படி 'கலகலவென' ஜாலியாக பழகுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரோட 'வொர்க்' பண்றது அட்டகாசமாக இருக்கு என்கிறார் 'நண்பன்' நாயகி இலியானா. மைக்ரோ-பிளாக்கிங் சைட்டில் இலியானா, 'டெகராடுன் தட்பவெப்ப நிலை உடலுக்கு இதமாக உள்ளது' என்று கூறியுள்ளாராம். |
Sunday, April 3, 2011
இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment