Monday, April 4, 2011

வேலாயுதம் விஜய் -இந்த கொடுமைய பாருங்க....!

வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திருமூர்த்திமலையில் நடந்து வருவதாக பேப்பரில் படித்தேன்..போன வாரம் தான் நான் அங்கு சென்று வந்தேன்..தமிழ்நாட்டில் இது போன்ற அழகான இடம்,அமைதியான பிரதேசம் இருக்க முடியுமா என்பது சந்தேகம்..மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உடுமலை அருகே அமைந்துள்ள, இயற்கை அன்னை கொஞ்சி விளையாடும் இடம்..அமணலிங்கேஸ்வரர் கோவில்,960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள இடம்..மூலிகை குணம் நிறைந்த அருவி என அருமையான பிரதேசம்...

சுத்தமான காற்று ,அழகான அருவி,ஜில்லுன்னு ஓடை,பரந்து விரிந்த அணைக்கட்டு...மெரினா பீச் போல...எங்கு பார்த்தாலும் காதலர்களின் கொஞ்சல்கள்...சூப்பரான போட்டிங்..என பரவச உலகமாக ,மனுசன் அதிகமா நாசம் செய்யாத ஒரு தங்க தீவு தான் திருமூர்த்திமலை அணைக்கட்டு...!
அங்குதான் விஜய் வேலாயுதம் பட்த்தின் ஷூட்டிங் நடக்கிறது எப்படியும் யூனிட் ஆட்கள் 100 பேர்கள் இருப்பார்கள்..
விஜய் முகரையை வேடிக்கை பார்க்க பத்தாயிரம் வேலையத்தவன்,வீணா போனவனுக...வருவானுங்க..(டேய் அந்த மூஞ்சியில என்னடா இருக்கு..எப்ப பார்த்தாலும் செத்து போனவன் கையில வெத்தலைய கொடுத்த மாதிரி இருக்கிற மூஞ்சி..)

துணை நடிகை,ஹீரோயினை நோட்டம் விட ஏதாவது சிக்குமா என ஜொள்ளு விட இருபதாயிரம் வருவார்கள்..
அடப்பாவிகளா..திருமூர்த்தி மலையை குப்பை மலை ஆக்கிடுவீங்களே...
திருமூர்த்தி மலை மாதிரியான பிரதேசத்தை நாசம் பண்ணுவதற்க்கு பதிலா,ஏதாவது வெளிநாடு போய் தொலைய வேண்டியதுதானே...
 இது போன்ற சுற்றுலா தலங்களில் ஷூட்டிங் செய்து நாசமாக்குவதை
அரசு தடை செய்ய வேண்டும்..
.

நான் உன் மேல வெச்ச பாசம்...
நீ என் மேல வெச்ச பாசம் ...
என தொடங்கும் பல்லவியை விஜய் இங்கு பாடி ஆடுகிறாராம்..
நீ,உங்கப்பன் எல்லாம் எங்க மேல என்ன பாசம் வெச்சிருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும்டி....
பார்த்து பாசத்துல வழுக்கி ஜெனிலியா மேல விழுந்து அந்த சின்ன இடுப்பை உடைச்சிடாதே...
ஆனா நாங்க பெரும்பாலும் உன் கூட ஆடுற அசின்,நயன்தாரா மேல தான் பாசம் வெச்சிருக்கோம்..
.
அவங்க எங்களை பார்த்து புன்னகை சிந்திகிட்டே ஆடுறப்போ ...நீ மட்டும் குரங்கு மாதிரி ஜங்கு ஜங்கு னு குதிப்பியே கண்ணை மூடிகிட்டு...அந்த இடம்தான் உன் பலவீனம்...குழந்தைகளுக்கு இது பிடிக்கறதால இந்த சர்க்கஸ் ஐ நாங்களும் பார்த்து தொலைய வேண்டியிருக்கு..
------------------------------------

அன்று-கருப்பட்டியும்,புளியும் கலந்த இயற்கை குடி நீர்...
இன்று-30 ரூபாய்க்கு வாங்கப்படும் மினரல் வாட்டர்
அன்று-காலையில் நீராகாரமும்,கஞ்சியும்
இன்று-உடலை நாசாமாக்கும் காப்பி,டீ,பீர்
அன்று-இயற்கை பனை நார் கட்டில்
இன்று-செயற்கை பிளாஸ்டிக் நார் கட்டில்,வாழை இலை
அன்று-நல்ல உணவு உண்டு ஆரோக்கிய குழந்தை பெற்றெடுத்தனர்
இன்று-ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டு பலவீனமான குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
அன்று-வியர்வை சிந்தி கிணறுகள் தோண்டப்பட்ட்து
இன்று-குப்பைகள் கொட்டி கிணறுகள் மூடப்படுகிறது..
---------------------------------------


அறிஞர் ஜெகதீஸ சந்திரபோஸ் தாவரங்களை பற்றி ஆராய்ந்து இருக்கிறார்..
மரத்தை வெட்ட போகும் நபரை பார்த்து மரம் அதிர்ச்சியாகி பயப்படுவதாகவும்,சும்மா செல்பவனை பார்த்து அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார்..
ஆடு அத்தனை அலறல் போட்டும் மனிதன் அதை விடுவதில்லை..மரம் கண்ணுக்கு தெரியாமல் கதறுவது பற்றி கவலை படுவானா?
மரங்களை நடு..அல்லது நாசமா போ...என்ற கோசத்துடன் அமெரிக்காவில் ஒரு குழு புறப்பட்டு இருக்கிரது..நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் மரங்களை நடுவோம்...இருக்கும் மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாப்போம்..வன்ங்களில் மரங்களை திருட்டு போகாமல் காப்போம்..என்கிறார்கள் இவர்கள்.
.
நம்ம ஊரில் விளை நிலங்களும்,காடுகளையும் அழிப்பவர்கள் ரியல் எஸ்டேட்கார்ர்கள்தான்..இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் விளை நிலங்களை வெகு வேகமாக அழித்து வருகிறார்கள்..
பவானி டூ அந்தியூர் ரோடு பச்சை பசேல் என பசுமையாக இருக்கும் சின்ன கவுண்டர்,சின்ன தம்பி போன்ற கிராமத்து கதை அம்சங்கள் நிறைந்த படங்கள் எல்லாம் இங்கு தான் எடுக்கப்பட்டன..
ஆனால் இன்று நாலு ஏக்கர் பசுமையாக இருக்கும் ஐந்தாவது ஏக்கர் செம்மெண் கொட்டி,இடம் விற்பனைக்கு என போர்டு தொங்குகிறது..

சொட்டை சொட்டை யாக இடங்கள் வாங்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன..இத்தனை நாட்களாக நம் வயிற்றுக்கு உணவை தந்த தாயின் வயிற்றை அறுக்க மனமில்லை என சில விவசாயிகள் நிலத்தை விற்க முன் வருவதில்லை..
ஆனால் அவர்களும் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள்...
30 லட்சம் போகும் இட்த்திற்க்கு ஒரு கோடி தருகிறேன் என்கிறார்கள்..என்ன கொடுமை..பணம் ஒரு சில குடும்பங்களிடம் மட்டும் மலை போல குவிந்தால் இதுதான் பலன்..

கோவை முதல் பவானி வரை உள்ள என்.ஹெச் ரோடு மேல் இருக்கும் விவசாய நிலங்கள் நான்கு வருட்த்திற்கு முன் பத்து லட்சம்.இன்று அதன் மதிப்பு இரண்டு கோடி..
கோவையில் வரும் பன்னாட்டு நிறுவன்ங்கள்,ஐடி..இவற்றால் இந்த விலையேற்றம் என சொல்லப்பட்டாலௌம் கண்டபடி ஊழல் செய்து வைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் கைங்கர்யமே இது...
வாழ்க ஜனநாயகம்
-----------------------
அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் பார்கள் குப்பை மேடுகளாக இருக்கின்றன..
சரியான பராமரிப்பு இல்லை...
ஒரு குடிமகன் நூறு ரூபாய்க்கு குடிக்கிறான்..அவன் உட்கார சரியான சேர் இல்லை ...ஃபேன் இல்லை...நாற்றம் அடிக்கும் படி இருக்கும் சூழல்..என தமிழக பார்கள் உள்ளன..கேரளாவில் மணல் பரப்பி கீற்று கொட்டகை அமைத்து ஃபேன் போட்டு ஊற்றி தருவார்கள்

No comments:

Post a Comment