தென்றலாக இருந்த விஜய்யை புயலாக மாற்றிவிட்டது காவலன் பிரச்சனைகள். அமைதியே உருவான விஜய் பொறுத்தது பொது என்று பொங்கி எழுந்துள்ளார். அவரது மனக்குமுறலை ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவரது பேச்சில் சரமாரியாக பொறி பறக்கிறது...

இதுவரைக்கும் என்னோட படத்தின் ரிலீஸ் நேரத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை நாங்களே சமாளித்து படத்தை வெளியிடுவோம். ஆனால் காவலன் விஷயத்தில் நான் எதிர்பார்க்காத புதுப் புது பிரச்சனைகள் வந்தது. இது யாரால் வருகிறது என்றே எங்களால் கணிக்க முடியவில்லை என்று புலம்பினார் விஜய்.
என்னுடைய படங்கள் பண்டிகை சமயங்களில் வெளிவருவது தான் வழக்கம். அதைத் தான் என் ரசிகர்களும் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் சிலர் எடுக்கும் படங்கள் மட்டுமே பண்டிகை நாட்களில் வெளிவர வேண்டும் என்று அவர்கள் நினைகிறார்கள். எல்லாரும் கொண்டாடத் தானே பொங்கல் பண்டிகை. 'நாங்க மட்டும் தான் கரும்பு கடிப்போம் , நாங்க மட்டும் தான் பட்டாசு வெடிப்போம்' என்று சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ( நியாயமான கேள்விதான் )
என் காவலன் படத்தை வெளிவரக் கூடாதுன்னு சிலபேர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தார்கள். ஆனால் இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி பொங்கலுக்கு காவலன் வந்து வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு என் முதல் நன்றியை என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்குத் தான் சொல்ல வேண்டும் என்று சொல்பவர்...
நான் நடிகனாகனும்னு தான் ஆசைப்பட்டு திரை உலகத்துக்கு வந்தேன். ஆனால் மக்கள் நான் எதிர்பார்த்ததை விட என்னை வேறு ஒரு உயரமான இடத்தில் அமரவைத்தார்கள். அதே போல இன்னொரு உயரமான இடத்தில் அவர்கள் அமர வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...
ஈரோட்டில் என் மக்கள் இயக்க ரசிகர்கள், நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஒழுங்கு செய்தார்கள். அங்கு திரண்டு இருந்த ரசிகர்களை நான் பார்க்க மேடைக்கு சென்றேன். ஆனால் போலீசார் என்னைத் தடுத்தார்கள். கூட்டம் அதிகமாய் உள்ளது நீங்கள் மேடைக்குப் போனால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். முறைப்படி போலீஸ் அனுமதி வாங்கித்தானே விழா நடத்துகிறோம் என்று நான் கேட்டேன். கடைசியில் என் ரசிகர்களை சந்திக்காமலேயே வேதனையோடு திரும்பி வந்தேன். அதன் பிறகு தான் நான் என் ரசிகர்களை சந்திப்பது யாருக்கோ பிடிக்காமல் இதெல்லாம் நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்டேன்.
சரித்திரத்தில் ஒரு சம்பவம் வரும். காந்தியை வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்'னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக மாறினார். என் வாழ்விலும் காவலன் ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அதுவே சரித்திரமாக மாறும். அந்த நாள் விரைவில் வரும்... யார் பேச்சையும் கேட்டு உடனடியாக எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுக்கிட்டே வர்றேன்
சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்கு எல்லாம் நான் கவலைப்படவே இல்லை! என்று கூறியுள்ளார் விஜய்.
No comments:
Post a Comment