Friday, April 8, 2011

விஜய்யின் அரசியல் பிரவேச ஆசை தடுக்கும் சக்தி !





தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிற நிலையில் அந்த மெகா கேள்வி சுற்றி சுற்றி அடிக்கிறது ரசிகர்களையும், அதிமுக கூட்டணி தொண்டர்களையும்! விஜய் பிரச்சாரத்திற்கு வருவாரா?
வருவாரு… ஆனா வரமாட்டாரு… என்கிற அளவுக்குதான் இருக்கிறதாம் உண்மை நிலவரம். ஏன் தெரியுமா? விஜய்கே அந்த ஆசை இருந்தாலும், பின்னங்காலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறாராம் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
அந்த விஷயத்தை விரிவாக சொல்வதற்கு முன்பு ஒரு பிளாஷ்பேக். கடந்த சில தினங்களுக்கு முன் காவலன் விளம்பரம் எந்த நாளிதழிலும் வரவில்லை. டெல்லியில் வேலாயுதம் படப்பிடிப்பிலிருந்த விஜய்க்கு போனது தகவல். அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தபடியே அப்பாவுக்கு போன் அடித்தாராம். அப்புறம் அவசரம் அவசரமாக படத் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டார்களாம். அவர் ஒரு கர்சீப்பே நனைகிற அளவுக்கு கண்ணீர் வடித்தாராம். வேறு வழியில்லாமல் இந்த விளம்பர செலவை ஏற்றுக் கொண்டது விஜய் தரப்பு. காவலன் படத்தின் மூலம் தன் பாக்கெட்டிலிருந்தும் சில கோடிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கிறாராம் ஆஸ்கர் ரவி.
இந்த நேரத்தில்தான் விஜய்யின் அரசியல் பிரவேச ஆசை! உங்களை நம்பி கோடிக்கணக்குல பணத்தை இறைச்சிருக்கேன். கட்சி அது இதுன்னு நீங்க எடுக்கிற எந்த முடிவும், என்னையோ என் படத்தையோ பாதிச்சுடக் கூடாது. அதனால் இந்த தேர்தலில் நீங்க அமைதியா இருக்கணும் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம் அவர்.
அதுமட்டுமல்ல, முக்கிய சங்கங்களில் இதை புகாராகவே எழுதி கொடுத்திருப்பதாகவும் அரசியலில் தலையிடும் விஜய்யை தடுத்து நிறுத்தும்படி அதில் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.

No comments:

Post a Comment