விஜய் சங்கரின் நண்பன் ஜெயம் ராஜாவின் வேலாயுதம் என மாறி மாறி நடித்து வருகிறார்.வேலாயுதம் படத்தின் சண்டைக்காட்சிகள் கடந்த வாரம் படம் பிடிக்கப்பட்டன .அதில் விஜய் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என கோலிவூட் சண்டைப்பயிற்சியாளர் கூறியுள்ளார்.தற்பொழுதும் விஜய் வேலாயுதம் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த இடைவெளியில் விஜய் ஜோஸ் ஆலூகாஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.விஜய் ஜோஸ் ஆலூகாஸ் நிறுவனத்தின் விளம்பர நடிகராக உள்ளார்.இந்த நிறுவனம் புத்தாண்டை ஒட்டி விளம்பரப்படுத்தும் விளம்பரத்திலும் நடித்துக்கொடுத்து விட்டு வந்துள்ளார்.
இவ்வாறு எந்த விதமான ஓய்வும் இன்றி நடித்து வரும் விஜய் அடுத்து பகலவன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.இவ்வாறு விஜய் தொடர்ந்து நடிப்பது ரசிகளுக்காகவே ஆகும்.

No comments:
Post a Comment