Friday, April 1, 2011

விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்




விஜய்சத்யராஜ்இலியானா போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த எந்திரன்’ படத்தை அடுத்துஇந்தியில் ஹிட்டான ‘3இடியட்ஸ்’ படத்தை நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய்சத்யராஜ்ஜீவாஸ்ரீகாந்த்இலியானா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி தனது வலைப்பதிவில் ஷங்கர் எழுதியிருப்பதாவது: நண்பன்’ படத்தின் இரண்டாம் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. கல்லூரி தொடர்பான காட்சிகள் அனைத்தையும் டேராடூனில் எடுத்துள்ளோம். விஷுவலாக இந்த காட்சிகள் மிரட்டும். இந்தப் படத்தில்விஜய்சத்யராஜ்இலியானாஜீவாஸ்ரீகாந்த் போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது. விஜய்,சத்யராஜ் காம்பினேஷன் பிரஷ்சாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். நண்பர்களாக நடிக்கும் விஜய்ஜீவாஸ்ரீகாந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரி,பிசிக்ஸ் எல்லாம் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்லபின்னாலும் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அனைவரும் அவரவர் கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார்கள். எந்திரன்’ படத்தில் இருந்து அனைத்து விதத்திலும்நண்பன்’ மாறுபட்டு இருக்கும். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment