Tuesday, April 5, 2011

நன்பனில் உதட்டோடு உதடு



நடிகை கங்கனா ரனவத்துக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் மாதவன். 3 இடியட்ஸ் வெற்றிக்குப் பிறகு இந்தியில் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் மாதவன்.

இப்போது அவரும் கங்கனா ரனவத்தும் இணைந்து தனு வெட்ஸ் மனு என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். இதில் கங்கனாவும், மாதவனும் மிக நெருக்கமாக நடித்துள்ளனராம். சில காட்சிகளில் உதட்டோடு உதடு பதித்து முத்தமழை பொழிந்திருப்பதாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால் இந்தச் செய்தியை மறுத்துள்ளார் மாதவன்.



இதுகுறித்து அவர் கூறுகையில், அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ எனக்கும் கங்கனாவுக்கும் அப்படி ஒரு காட்சி அந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் செய்தி வந்துவிட்டது. அதைப் படித்து ரசிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. இப்போது இந்தப் படத்தின் விளம்பர சுற்றுப் பயணத்தில் இருக்கிறேன்.

படத்தில் நடிப்பது கூட ஈஸி. ஆனால் விளம்பர பணி இருக்கிறதே.. ரொம்ப சிரமம் என்றார்.


தமிழில் 3இடியட்ஸ் விஜயின் நண்பன்ஆக வெளிவரவுள்ளது. இந்தப்படத்திலும் இந்த மாதிரி காட்சிகளுண்டா என கேட்டாலும் மழுப்புகின்றனர் மாதவனுட்பட்ட படக்குழுவினர்...

No comments:

Post a Comment