தற்போது ஷங்கரின் நண்பன் படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் இந்தி 3 இடியட்ஸின் ரீமேக். இதுபோன்று ஒரு படத்தை ரீமேக் செய்யும் போது ஒரிஜினலின் சில டியூன்களையாவது பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நண்பனில் இடம்பெறும் ஆறு பாடல்களும் ஹாரிஸ் புதிதாகப் போட்டவை. 3 இடியட்ஸ் பாடல்களை நண்பனில் பயன்படுத்தவே இல்லை என்றார்.
மேலும், ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஒருபோதும் இசையமைக்க மாட்டேன் என்றவர், அது ரீமேக் படமாக இருந்தாலும் அதன் ஒரிஜினல் டியூன்களை பயன்படுத்த மாட்டேன் என்றார் உறுதியாக.
தற்போது இவரது கோ, எங்கேயும் காதல் பாடல்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment