Tuesday, April 5, 2011

சந்தித்தனர் தளபதியும் தலயும் - பரிசும் பரிமாறினர்.


சில தனங்களுக்குமுன் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த தளபதி விஜய்யை, தல அஜீத் சந்திந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துப்பேசியுள்ளது கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் ஹாட் செய்தி.


சென்னை பின்னிமில்ஸில்  விஜய் நடித்துவரும் “வேலாயுதம்” படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் “மங்காத்தா” படப்பிடிப்பும் தற்போது அங்கு நடைபெற்றுவருகிறது. திடீரென “மங்காத்தா” படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய், அஜீத்தை சந்திந்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் சிறுதுநேரம் தனியாக மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அஜீத்திற்கு வாட்ச் ஒன்றை கிப்ட்டாக அணிவித்தார் விஜய்.

இந்த சந்திப்பு பற்றி படப்பிடிப்பு யூனிட்டில் பரபரப்பாகவே சிலாகித்து பேசிக்கொண்டிந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆரோக்கியமான போட்டியாகும் ரசிகர்களும் அவ்வாறே ஒற்றுமையாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment